டிரம்புக்கு வாக்களிக்காதீர்கள் – சூழலியலாளர்

21

சூழலியல் மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு முக்கியமானது என்றும், எனவே அனைவரும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்குமாறும் ஸ்வீடனின் சுழலியில் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வலியுறுத்தியுள்ளார்.

தான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும், ஆனால், வரவிருக்கும் அமெரிக்க தேர்தல் அனைத்தையும் நிர்மாணிக்கும் சக்தியை கொண்டிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

நடப்பு அரசியலுடன் சூழலியல் மாற்றத்திற்கான தீர்வுகளும் பொதிந்திருப்பதை குறிப்பிட்டு, தேர்தலில் அனைவரும் ஜோ பைடனுக்கு வாக்களிக்க வேண்டும் என டிவிட்டரில் துன்பெர்க் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துன்பெர்க்கின் உலக மயத்திற்கு எதிரான சீற்றத்தினை கிண்டலடிக்கும் விதமாக டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பைடன், துன்பெர்க்கினை சந்தித்து சூழலியல் போராட்டங்கள் குறித்து தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

இதே போல கடந்த மாதம் அமெரிக்காவின் பிரபல அறிவியல் இதழான `சயின்டிஃபிக் அமெரிக்கன்’ எதிர்வரும் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

தனது 200 ஆண்டுக்கால இதழியல் வரலாற்றில் `சயின்டிஃபிக் அமெரிக்கன்’ முதல் முறையாக அரசியல் நிலைப்பாட்டை தற்போது மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE