2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ள ஒப்போ ஸ்மார்ட்போன்

33
திடீரென விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

ரெனோ 3 ப்ரோ
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக திடீரென அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய விலை குறைப்பின் படி ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாடல் ரூ. 25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசானில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
 ரெனோ 3 ப்ரோ
முன்னதாக ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 128ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டது. தற்சமயம் டாப் எண்ட் மாடல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் புல் ஹெச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா, 44 எம்பி செல்பி கேமரா, 4025 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
SHARE