இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் வை சீரிஸ் டிவி மாடல்கள்

48
இந்தியாவில் ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி விற்பனை துவக்கம்

ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி
ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 32 இன்ச் ஹெச்டி, 43 இன்ச் புல் ஹெச்டி என இரு மாடல்களில் கிடைக்கிறது.
இரு வேரியண்ட்களிலும் 93 சதவீதம் DCI-PR கலர் கமுட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி ஆக்சிஜன் ஒஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி பிளாட்பார்மில் இயங்குகிறது. இதனால் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை, கூகுள் பிளே செயலிகள் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தலாம்.
 ஒன்பிளஸ் வை சீரிஸ் டிவி இத்துடன் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ தொழில்நுட்பம், ஒன்பிளஸ் கனெக்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஒன்பிளஸ் டிவி மாடல்கள் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு டிவி மாடல்கள் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனையின் போது இவற்றின் விலை ரூ. 1000 குறைக்கப்படுகிறது.
அந்த வகையில் இரு மாடல்களையும் ரூ. 13,999 மற்றும் ரூ. 23,999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் பல்வேறு வங்கி சார்ந்த சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவைகளை பெற முடியும்.
SHARE