பாவனாவின் புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்த ரசிகர்கள்

46
வெயிட் போட்ட பாவனா... கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பாவனா
கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார்.
ஐந்து ஆண்டு காதலுக்கு பின்னர் நவீன், பாவனா கடந்த 2018ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ள பாவனா தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்ளுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
பாவனாதற்போது இந்த லாக்டவுனில் உடல் எடையை கூடிவிட்டதாக கூறி மிரர் செல்பி புகைப்படமொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் கிடைத்தாலும், அப்படி ஒன்றும் நீங்கள் வெயிட் போடவில்லை… இதெல்லாம் வெயிட்டா… வேறு ஏதோ நல்ல செய்தி சொல்ல போறீங்களா… என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
SHARE