மூன்று நாடுகளிலிருந்து 61 பேர் நாடு திரும்பினர்

36

மூன்று நாடுகளிலிருந்து இன்று(13) மொத்தம் 61 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் டோஹா கட்டாரிலிருந்து 48 பேரும் அபுதாபியிலிருந்து 8 பேரும் இந்தியாவிலிருந்து ஐவரும் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையக் கட்டிடங்களில் பிசிஆர் சோதனையை எதிர்கொண்ட பின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நாட்டில் நிலவும் கொவிட்19 நிலைமை காரணமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைப்பதை தற்காலிகமாக தாமதப்படுத்த வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளது.

SHARE