கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 7 பேருக்கு கொரோனா!

36

கொள்ளுப்பிடியில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் வைத்தியர் தினுக குருகே தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

குறித்த நபர்கள் அனைவரும் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பணியாற்றிய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE