தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 379 பேர் வெளியேற்றம்

19

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம்(புதன்கிழமை) 379 பேர் வெளியேறியுள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 52 ஆயிரத்து 90 பேர் இதுவரை தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன், தற்போது, 84 நிலையங்களில் 9 ஆயிரத்து 905 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE