சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல் கட்ட முடியாத அளவிற்கு மிகப்பெரும் எதிர்ப்பு.

41

 

சுவிட்சர்லாந்தில் பள்ளிவாசல் கட்ட முடியாத அளவிற்கு மிகப்பெரும் எதிர்ப்பு.

மொத்தம் 4 பள்ளிகளே இருந்தன.
புதிய பள்ளிகள் உருவாக்கப்படுவதை அங்குள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய ஒரு அமைப்பு எதிர்த்து வந்தது. அதை எதிர்க்க அவர்கள் வைத்த பெயர்
‘மினாராக்கள் எதிர்ப்பு திட்டம்’ (Anti Minarat Campaign).

இதை தோற்று வித்தவர் டேனியல் ஸ்ட்ரெச் (Daniel Streich) என்பவர்.

தனது கட்சியின் மூலமாக அத்தனை சக்தியையும் திரட்டி முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டார்.
மினாராவை மிஸைல் போல வடிவமைத்து போஸ்டர் ஒட்டினார்கள். நகரெங்கும் போஸ்டர்.
எதிர்ப்பு பிரச்சாரம், போராட்டம் என தினமும் ஏதாவது நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் ஆதரவாளர்கள் பெருகினர். இஸ்லாமிய எதுிர்ப்பாளர்கள் அதிகமாயினர்.

இன்னும் வீரியமாக எதிர்க்க முனைந்து முஹம்மது நபியை குறை காண, விமர்சிக்க தலைப்பட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்க ஆரம்பித்தார். அவரது வரலாற்றின் முரண்பாட்டை சொல்லி அவரது கொள்கைவாதிகளை குழப்ப வேண்டும் என்பதுலே அவரது எண்ணம்!

என்ன ஆச்சரியம்!

இஸ்லாத்தை பற்றி இதுவரை அவர் எடுத்து வைத்த வாதங்கள் எதையும் முஹம்மது நபியின் வரலாற்றில்; காண முடியவில்லை.
அவற்றிற்கு நேர் மாற்றமானவை தான் முஹம்மது நபியின் வாழ்வு என்பதை படித்தார்.

பிற மதத்தவருடன் நல்லிணக்கம்
அவர்களுக்கு செய்த உதவிகள்
மட்டுமின்றி தன்னை பின்பற்றுபவர்கள் அனைவரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டதையும் படித்தார்.

மெல்ல மெல்ல இஸ்லாம் பற்றிய அவரது எதிர்ப்பு குறைந்தது.

அது மட்டுமல்ல..

இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவராக அவரை அல்லாஹ் மாற்றிவிட்டான்.

வெறுமனே பின்பற்றியதுடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

இன்று 5 வது பள்ளி கட்டும் பணியை அவரே பொறுப்பேற்றுள்ளார்.

SHARE