முல்லை ,வவுனியா மாவட்டங்களில் ஊடகவியலாளர்களே பாதுகாப்பு அரண் என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவிப்பு.

97

 

முல்லை ,வவுனியா மாவட்டங்களில் ஊடகவியலாளர்களே பாதுகாப்பு அரண் என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் தெரிவிப்பு.
கடந்த வாரம் முல்லை மாவட்டத்தின் முன்னணி ஊடகவியலாளல்களான தவசீலன் ,குமணன் ஆகியோர் மீது அடையாளம் தெரியாதோரால் தாக்கப்பட்டதாக செய்திக்கள் வந்தது .இன்று முல்லை மாவட்த்தில் சட்ட விரோத காடழிப்பு என்பது கடந்த தேர்தலின் பின் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அண்மையில் இராணுவ உயர்மடத்தினர் வன்னியில் காடுகள் அழிக்கபட்டு வருவது பற்றி குறிப்பிட்டு இருந்தனர்.
இம்முறை தேர்தலில் வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் தோற்கடிக்கப்பட்டதால் எந்தவித பயமும் இன்றி சட்ட விரோதமாக ஆக்கிரமிப்புகாரர்களால் காடழிப்பு செயல்களை முன்னெடுத்து செல்வதிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுவருவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்விடயத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுவை பொறுப்பெடுத்து கொண்டவர்கள் தங்களது கடமைகளை சரியாக நிறைவேற்றி இந்த காடு அழிப்பு மாபியாக்களின் செயற்பாட்டுகளை உடன்நிறுத்த முன்வரவேண்டும்.
தவறும்பட்ச்சத்தில் எதிர்காலத்தில் இலங்கை நாட்டில் அதிக்கப்படியான வனவளத்தை கொண்ட முல்லைதீவு மாவட்டம் சீரழிக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடதக்கது. பகிரங்கமான காணியில் தேக்கு மரங்களை கொண்டு வீடு கட்டியவர்களைகூட கைது செய்யமுடியாத நிலையில் பொலிசாரின் தற்போதய சட்ட ஆட்ச்சிக்கு கேள்விக்குறியாக அமைக்கிறது .
எனவே இவ் விடயத்தில் நீதி நிலைநாட்டபடுவது தவறும்பட்ச்சத்தில் மக்களை திரட்டி சிறப்பு உரிமைபெற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது மேலானது. என முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
SHARE