இந்தியாவில் அறிமுகம் சுழலும் திரை கொண்ட சாம்சங் டிவி

27
சுழலும் திரை கொண்ட சாம்சங் டிவி இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் சிரோ
சாம்சங் நிறுவனம் தி சிரோ எனும் பெயரில் முற்றிலும் வித்தியாசமான டிவி மாடலை 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில்  அறிமுகம் செய்தது. இது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் சுழலும் திரை கொண்டிருந்தது.
எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் தரவுகளை டிவியில் செங்குத்தாக பார்க்கும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டதாக சாம்சங் அறிவித்து இருந்தது. இந்நிலையில், சாம்சங் சிரோ டிவி மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சிரோ மாடலில் ஆல்-இன்-ஒன் ஸ்டான்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டான்டின் மீது 43 இன்ச் QLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை பயனர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ திருப்பி வைத்து பார்க்கலாம்.
 சாம்சங் சிரோ
வடிவம் மற்றும் அமைப்பு தவிர இது வழக்கமான சாம்சங் ஸ்மார்ட் டிவி போன்றே இயங்கும். மொபைல் தரவுகளை டிவியில் பார்க்க விரும்பும் போது திரை செங்குத்தாக திரும்பி கொள்ளும். இது செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களை இயக்கும் போது பயனுள்ள அம்சமாக இருக்கும்.
இந்த டிவியின் முன்புறம் 4.1 சேனல் 60வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் தலைசிறந்த பேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் சிரோ மாடல் நேவி புளூ நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் சிரோ ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 1,24,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
SHARE