விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுள்ள நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள்  4 பேர்

27

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)  நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ (Dragon Crew-1 capsule) விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நாசா மற்றும் ஜப்பான் வீரர்கள்  4 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரொக்கெட் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

27 மணி நேரத்தில் டிராகன் க்ரூ  விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடையும். விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.

SHARE