ஏடிபி பைனல்ஸ் தொடரில் வெற்றிபெற்ற ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ்

32

ஏடிபி பைனல்ஸ் தொடரின் ‘டோக்கியோ 1970’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ் வெற்றிபெற்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வேடவ்வும் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனியல் மெட்வேடவ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்றார்.

SHARE