மேக் ஒஎஸ் பிக் சர் தளத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்

31
அது உண்மை தான் - உடனடி அப்டேட் கொடுத்த ஆப்பிள்

மேக் ஒஎஸ் பிக் சர்
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த கோளாறு சர்வர் சார்ந்த பிரச்சினை என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட்டதில் மிகப்பெரும் அப்டேட்டாக மேக் ஒஎஸ் பிக் சர் சில நாட்களுக்கு முன் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்த அப்டேட்டில் புதிய வடிவமைப்பு, சபாரி, மெசேஜஸ், மேப்ஸ் மற்றும் பிரைவசி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு உள்ளன.
 மேக் ஒஎஸ் பிக் சர் மேலும் இந்த ஒஎஸ் ஆப்பிள் நிறுவனத்தின் எம்1 சிப்செட்டிற்காக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் பிரச்சினை மேக் சாதனங்களில் மூன்றாம் தரப்பு செயலிகள் எவ்வித சோதனையும் இன்றி சுலபமாக லான்ச் ஆக செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மேக் ஒஎஸ் தளத்தில் கேட்கீப்பர் எனும் அம்சம் செயல்பட்டு வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட மென்பொருளை மட்டுமே மேக் தளத்தில் இன்ஸ்டால் ஆக அனுமதிக்கும். மேலும் இது மால்வேர் உள்ள செயலிகளை கண்டறிந்து அவற்றை சாதனத்திற்குள் அனுமதிக்காது.
பயனர் தரவுகளை பாதுகாக்கும் வகையில் ஆப்பிள் டெவலப்பர் ஐடி சோதனைகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஐபி-க்கள் லாக் ஆவதை தடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஐபிக்கள் சேகரித்த தரவுகளை மீட்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
SHARE