3D தொழிநுட்பத்தில் காரைத் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!

48

சுவீடனைச் தளமாகக் கொண்ட தொழிநுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் பிரித்தானியாவில் 3டி தொழிநுட்பத்தின் மூலம் மின்சாரக் காரை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

முப்பரிமாணங்களில் அச்சிடும் இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் 3டி தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

இம் முறையில் மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்ட குறித்த  மின்சாரக் காரினால் 45 நிமிடங்கள் வரை தொடர்ந்து பயணிக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.

மேலும் பட்டரி மூலம் இயங்கும் இக் காரானது 150 கிலோ திராம் எடை கொண்டதுடன் அடுத்த 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என அதனைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பச்சோந்தி என பொருள்படும் வகையில் கெமிலியொன் (Chameleon) என இக் காருக்கு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE