தாய்லாந்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டிய பூனை

58

தாய்லாந்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பூனையொன்று விரட்டியடித்துள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

நகோன் நாயோக் (Nakhon Nayok) என்ற பகுதியில் 35 வயதான காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. தொடர்ந்து வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்களையும், செடிகளையும் குறித்த யானை துவம்சம் செய்தது.

இந் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வளத்து வரும் சிம்பா என பெயரிடப்பட்ட 3 வயதான பூனையொன்று யானைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல் சீற்றத்துடன் அதனை எதிர் கொண்டதுஇதனால் பயந்து போன யானை அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

SHARE