வெளியாகிய சிம்புவின் `மாநாடு` படத்தின் போஸ்டர்

45

கடந்த 2018 ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.

படப்பிடிப்பு தொடங்கினாலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் கைகூடி வந்த நேரத்தில் கொரோனா தடையாக அமைந்தது. பல மாதங்கள் இடைவெளி விட்ட நிலையில் தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை முடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ”நீ தனியாளாக இருந்தாலும் சரியான ஒன்றுக்காக துணிந்து நில்” என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் அமைந்துள்ளது.

மேலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாநாடு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநாடு படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SHARE