நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழுவினர்

49

நடிகை நயன்தாராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சினிமாவில்  நடிகர்களுக்கு இணையாக நடிகைகள் உச்சம் தொடுவது அரிதான காரியம். நடிகைகள் பானுமதி,  சாவித்திரி போன்ற ஒருசில ஜாம்பவான்கள் மட்டுமே சாதித்துக் காட்டியதை சமகாலத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் நடிகை நயன்தாரா.

டயானா குரியன் ஆக திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் மாடலிங் துறையில் இருந்த விருப்பத்தால் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2003-ஆம் ஆண்டு மனச்சினக்கரே எனும் மலையாள திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாராவிற்கு 2005 ஆம் ஆண்டில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து  தமிழ் திரையுலகில் வெற்றி கதாநாயகியாக நயன்தாரா வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE