வீடுகளில் உள்ள முதியவர்களை வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அழைத்து செல்லுமாறு இராணுவத்தளபதி அறிவிப்பு

23

வீடுகளில் இருக்கின்ற நீண்ட கால நோய் வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் ஏதேனும் அசௌகரியங்களுடன் இருப்பவர்கள் என அனைவரையும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு இராணுத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியும் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக வீடுகளில் மரணிக்கின்ற முதியவர்கள் நீண்டகால நோயாளிகளில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறானவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதன் மூலம் அவர்களின் நலனில் அவதானம் செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE