மாவீரர் நாள் தொடர்பாக யாழ் நீதிமன்றின் தீர்ப்பு

33

மாவீரர் நாள் அனுஷ்டிப்பை தடை செய்யக்கூடாது எனக்கூறி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது. இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதாலும் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதாலும் வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்ம் பிரேம்சங்கர் வழக்கை தள்ளுபடி செய்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறிவித்தது. மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சனா காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

SHARE