வடக்கு மக்களை கேவலமாக பேசிய யாழ் தலைமை பொலிஸ் அதிகாரிக்கு பதிலடி கொடுத்தார்

18

வடக்கு மாகாண மக்கள் புட்டும் வடையும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு பீட்ஸா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாந் பெர்னாண்டோ நேற்று யாழ் நீதிமன்றில் மன்றுரைத்தார். இதனை ஆட்சேபித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாக பேசுகின்றார். 10 ஆண்டுகளாக மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் நான் வடக்கு மக்களைப் பேசுவதற்கு இவர் யார் எனக் கேட்கின்றேன் என்றார். அதனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கண்டித்து மன்று அவரை கட்டுப்படுத்தியது மாவீரர் நாளை தடை செய்ய கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு நேற்று யாழ் நீதிமன்றில் நடைபெற்றது. இவ்வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE