மூன்று பிள்ளைகளின் தாய் தீமூட்டி தற்கொலை யாழில் சோகம்

14

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் பெண் ஒருவர் தன்னைத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் மேரி ரெமினா வயது (38) என்ற 3 பிள்ளைகளின் தாய் கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக இவ்வாறு தீமூட்டி கொண்டதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பு விசாரணையை வைத்திசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவமாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE