வவுனியா பிரபல நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் கைது

11

வவுனியாவில் உள்ள பிரபல நகைக்கடையில் நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை மிகவும் இலாபகமாக திருடிய மூன்று திருடர்களை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி தெரியவருவதாவது குறித்த நகைக்கடையில் கடந்த 13-11-2020 அன்று நகை வாங்குவது போல் வந்த தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோர் நகைகளை காட்டுமாறு கோரியுள்ள நிலையில் கடை ஊழியரினால் அவர்கள் கேட்கும் நகைகள் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு பல நகைகளை பார்த்த திருடர்கள் கடை ஊழியர் சற்றே அசந்த நேரத்தில் நகைகளை எடுத்துள்ளனர். பின்னர் நகைகள் பிடிக்கவில்லை என அவர்கள் சென்றுள்ளனர். அன்று மாலை நகைகளின் இருப்பு எடுக்கும்பொழுது நகைகள் குறைந்ததால் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அம்பாந்தோட்டை மற்றும் கலாவ பகுதியை சேர்ந்த தாய் மகள் மற்றும் காதலன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு திருட்டுக்களை மேற்கொண்டிருந்ததுடன் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

SHARE