வவுனியா சுகாதாரப் பிரிவினரால் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, நீக்கம்

11

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரப் பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய வவுனியா மாவட்ட சுகாதாரப் பிரிவினர் கடந்த 5 ஆம் திகதி அன்று மாவட்டத்தில் உள்ள சகல உணவகங்கள் திறந்த வெளி உணவகங்கள், குளிர்பான நிலையங்கள் ஆகியவற்றில் அமர்ந்து உணவு உண்ணும் முறை தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இத் தடையானது நேற்று மாலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறையை பேணி ஒரு மேசையில் இருவர் என்ற அடிப்படையில் செயல்படுமாறும் மற்றும் உணவகங்களுக்கு வருவோரின் பெயர் விபரங்களை பதிவு செய்யுமாறும் சுகாதாரப் பிரிவினர் உணவக உரிமையானவர்களை கேட்டுள்ளனர்.

SHARE