மாவீரர் நாள் ஆரம்பம் : தடையமைக்க தயாராகும் பொலிசார்

21

தமிழர் பகுதிகளில் நவம்பர் 21 தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் செல்லும் பாதையில் பொலிசார் வீதி தடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனபுரம் தேர்வில் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுகைக்கு நேற்றைய தினம் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்த இன்று காலை முதல் பொலிசார் மக்கள் கூடுவதை தருக்குமுகாமாகவும் அஞ்சலி செலுத்துவதை தடுக்குமுகமாகவும் வீதிகளில் தடைகள் அமைத்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE