மாணவர் படுகொலை நினைவேந்தலுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ள பொலிசார்

11

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் 9 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதியாகும். இதை தடை செய்யும் நோக்கில் மல்லாவி பொலிசார் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுஜன்சனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதுடன் நினைவு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர். படையினரின் கிளைமோர் தாக்குதலில் பலியான மாணவர் புதைக்கப்பட்ட இடத்தில் பெற்றோர்கள் நினைவு கொள்வதை தவிர்க்க முடியாது என்று பிரதேச சபை உறுப்பினர் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். பிரதேச விசாரணை நடத்தி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE