தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகள்

24

இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மாறி மாறி இலங்கையை ஆட்சி செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்களால் நன்கு திட்டமிட்டு அடக்கியொடுக்கப்படும் சூழலுக்குள் தள்ளப்பட்டே வருகின்றனர். இந்நாட்டில் மூவின மக்கள் வாழ்கின்ற போதிலும் தமிழினம் தான் சொல்லொனாத் துயரங்களை தொடர்ந்தும் சந்தித்தே வருகின்றது. இன்றுவரை சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் இலக்குவைக்கப்பட்டுஇ கண்காணிக்கப்பட்டே வருகின்றார்கள்.

திணிக்கப்பட்ட அடக்குமுறைகளின் வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது ஆயுதப்போராட்டமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அஹிம்சை ரீதியான போராட்டங்கள் மாத்திரமே தமிழினத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலை நோக்கி அன்று ஆயுதம் ஏந்திப் போராடத் தலைப்பட்ட தமிழினம்இ யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும் அதே நோக்கத்துடன் அஹிம்சை ரீதியாகப் போராடி வருகின்றது.

தமிழினத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கும்இ அவ் வீரர்கள் இப்போராட்டத்தில் மரணிக்கின்றபோது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் குறித்த இனத்தின் மக்களுக்கு முழு அதிகாரமும் உண்டு. அதனை தடுப்பதற்கு அல்லது அது தொடர்பாக விமர்சிப்பதற்குஇ தடை செய்யவேண்டும் என்கிற கட்டளைகளை இடுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. ஏனெனில் விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துவதற்கு காரணமாக இருந்ததே இந்த சிங்கள ஆட்சியாளர்கள் தான் என்பதை அனைவரும் நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் விரும்பி தம் தோள்களில் ஆயுதந்தரித்து போராடவில்லை. அடக்குமுறைகள் அரசினால் திணிக்கப்பட்டது என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் கூறுவதைப்போல விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்வதற்கு காரணகர்த்தாக்களாக இருந்ததே நீங்கள் தான் என்கிறபோதுஇ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த கடந்த பத்து ஆண்டு கால இந்த இடைவெளியில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசு தொடர்ந்தும் தடைவிதித்து வருவது குறித்து தமிழினம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நாம் தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடித்துவிட்டோம், ஆயுதமேந்திய விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றாக அழித்துவிட்டோம் என மார்தட்டிக் கொண்டாடும் சிங்கள அரசுஇ எமது தாயக மண்ணுக்காக உயிர்நீத்த வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்த இன்றும் பயம் கொள்வது ஏன்? முந்திக்கொண்டு பொலிசார் நீதிமன்றங்களின் தடைகளைப் பெறுவது ஏன்? எதற்காக இன்றும் நீங்கள் அச்சம் கொள்கின்றீர்கள் என ஆற அமர ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்துப் பார்த்ததுண்டா? உலக நாடுகளின்இ உங்கள் அரசுகளின் சிந்தனைகளுக்கு அப்பால் தமிழினத்தின் விடுதலை குறித்தும்இ திட்டமிட்டு உங்களால் எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அடக்குமுறைகள் குறித்தும் மிகத் துல்லியமாக கணித்து பல கட்டமைப்புக்களை நிறுவி திறம்பட செயற்பட்டவர்கள் தமிழர்கள். இன்றும் மிகக் கவனமாக உங்கள் அரச தரப்பினரால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றால்இ நாங்கள் உயிர்ப்புடன் தான் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

நாம் பொது வெளியில் தீபம் ஏற்றி தமிழினத்தின் விடுதலைக்காக தம்முயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை உங்களது வெள்ளைக் காகிதம் மூலமாகத் தடுத்திருக்கலாம் ஆனால் எமது மனதால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்போவதை என்ன செய்யப்போகிறீர்கள். அடக்குமுறைகள் மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்ற போது வன்முறைகள் உருவாகும். இனங்களுக்கிடையில் முறுகல் நிலை தோன்றுமேயொழிய இந்நாடு சுபீட்சமான பாதை நோக்கிப் பயணிக்காது என்பதை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

SHARE