டோனி மனைவியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மாலிக்-சானியா மிர்சா தம்பதி

13
டோனி மனைவி சாக்‌ஷி பிறந்த நாள் விழாவில் சோயிப் மாலிக்-சானியா மிர்சா தம்பதி

எம்எஸ் டோனி, சாக்‌ஷி, சானியா மிர்சா, சோயிப் மாலிக்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற்றது. கடந்த 10-ந்தேதியோடு ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டது. ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் ஆன எம்எஸ் டோனி குடும்பத்துடன் துபாயில் உள்ளார். இன்னும் இந்தியா திரும்பவில்லை.
நேற்று எம்எஸ் டோனியின் மனைவி சாக்‌ஷியின் பிறந்த நாள். குடும்பத்துடன் சாக்‌ஷி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்த நாள் விழாவில் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் உடன் இணைந்து கலந்து கொண்டார்.
சாக்‌ஷி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட படத்தை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா உடன் அவரது சகோதரி அனம் கலந்து கொண்டார்.
SHARE