தனியார் தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் திடீர் மரணம் அதிர்கிறது கொழும்பு

26

கொழும்பு தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திலிருந்து கடமை முடிந்து வீட்டிற்று சென்று சாப்பாடு முடித்தபின் உடல்வலி ஏற்பட்டதாகவும் வைத்தியசாலைக்கு கணவர் அழைத்து சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது. இவர் கொழும்பு தனியார் ஊடகத்தில் செய்திப் பிரிவில் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றியவர் என்றும் கண்டி புசல்லாவையை சொந்த இடமாக கொண்ட குழந்தை வேலு சந்திரமதி என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவர். உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முடிவுகள் வந்தவுடன் இறுதி கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE