பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க மறுத்த அனுஷ்கா

23
அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு

அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார்.

தற்போது அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
அனுஷ்காதற்போது வரை அனுஷ்கா தனது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனுஷ்காவிற்கு சமீபத்தில் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கள் வந்ததாகவும், ஆனால் அந்தப் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்காத அனுஷ்கா நிராகரித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
அனுஷ்கா வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்கள் படத்திலோ அல்லது தனக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டுமே அனுஷ்கா பணிபுரிய விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
SHARE