ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

30
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

ஒப்போ
ஒப்போ நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ்11 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பீட்டா மற்றும் அதிகாரப்பூர்வ வெர்ஷன்களை பெறும் ஸ்மார்ட்போன்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் உலகின் எந்தெந்த பகுதிகளில் இந்த அப்டேட் வழங்கப்பட இருக்கிறது என்ற விவரங்களையும் ஒப்போ தெரிவித்து உள்ளது. படிப்படியாக வெளியிடப்படுவதால் ஒரே ஒப்போ போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்க சிலகாலம் ஆகும் என தெரிகிறது.
 ஒப்போ
ஒப்போ கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட்
ஒப்போ பைண்ட் எக்ஸ்2, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ, பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆட்டோமொபைல் லம்போர்கினி எடிஷன், ஒப்போ எப்17 ப்ரோ, ரெனோ 4எப், ஒப்போ ஏ93, ரெனோ 4 ப்ரோ 5ஜி, ரெனோ 4 ப்ரோ 4ஜி, ரெனோ 4 4ஜி, ரெனோ 4 லைட், ரெனோ 3 ப்ரோ 4ஜி, ரெனோ 3 4ஜி மற்றும் ஒப்போ ஏ72 உள்ளிட்ட மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 ஸ்டேபில் அப்டேட் பெற இருக்கின்றன.
 ஒப்போ
ஒப்போ எப்11, ஒப்போ எப்11 ப்ரோ மற்றும் எப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் மாடல்களுக்கு இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அப்டேட் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஒப்போ ஏ52, ஒப்போ ஏ9 மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்படுகிறது.
ஜனவரி 26 ஆம் தேதி முதல் ரெனோ 2எப், ரெனோ 10எக்ஸ் ஜூம் மாடலுக்கும், ஒப்போ எப்15 மாடலுக்கு ஜனவரி 29 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
SHARE