நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்

21
மலிவு விலையில் நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஷாட்ஸ் நியோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அல்ட்ரா-லோ லேடென்சி மோட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் மூலம் மியூசிக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, சிரி அல்லது கூகுள் அசிஸ்டண்ட் போன்ற சேவையை ஆக்டிவேட் செய்ய போன் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
 நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 அம்சங்கள்
– ப்ளூடூத் 5
– 6எம்எம் ஸ்பீக்கர் டிரைவர்
– MEMS மைக்
– ஸ்மார்ட் டச் கண்ட்ரோல்
– லோ லேடென்சி கேமிங் மோட்
– வாட்டர் ரெசிஸண்ட் வசதி
– பின்டிப் மற்றும் சிலிகான்
– கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி
– 5 மணி நேர பிளேபேக்
நாய்ஸ் ஷாட்ஸ் நியோ 2 இயர்போன் ரேவென் பிளாக், ஆம்பர் ஆரஞ்சு, கோபால்ட் புளூ மற்றும் லைம் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
SHARE