விடுதலைப்புலிகளே நாய்களை போல் இராணுவத்தை கொன்றார்கள் : ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கருத்து தவறானது

232

விடுதலைப்புலிகளை நாய்களை போல கொன்றோம் என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் கருத்து மீண்டும் ஒரு வன்முறையை தூண்டுவது போல் அமைகிறது. இதில் ஒரு வேடிக்கை விடயம் என்னவென்றால் 30 ஆண்டுகால போரியல் வரலாற்றில் விடுதலைப்புலிகள் தான் சிங்கள இராணுவத்தை நாய்கள் போல கொன்றொழித்தார்கள். 1 இலட்சத்து 40 ஆயிரம் தமிழ் அப்பாவி பொது மக்களை கொலை செய்து விட்டு விடுதலைப்புலிகளை நாய்களை போல் கொன்றோம் என்று மார் தட்டி பேசுகின்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இந்த பேச்சை வாப்பஸ் வாங்க வேண்டும். எனக்கு இரண்டு முகம் உண்டு என்ற பேச்செல்லாம் முன்னொரு குரோதத்தை இந்த நாட்டில் வளர்ப்பதற்கான அடித்தளத்தை 30 ஆண்டுகால போரியல் வரலாற்றில் 2009 வரையிலும் எந்தவொரு யுத்தத்திலும் வெற்றி கொள்ளாத இலங்கை அரசு குறிப்பாக டட்லி சேனநாயக்க தொடக்கம் கோட்டபாய ராஜபக்ச வரை அனைத்து ஆட்சியாளர்களுமே விடுதலைப்புலிகளிடம் தோல்வி கண்டவர்கள். இவ்வாறான ஆகோச பேச்சுக்களினால் பௌத்த பீடங்கள் சிங்கள இனவாத கட்சிகளும் தமிழினத்தை தூண்டி பார்க்கின்ற ஒரு செயற்பாட்டையே முன்னெடுக்கின்றது. இதற்கு ஒரு நாட்டின் ஜனாதிபதியும் துணைபோவதாகவே அவரின் பேச்சிலிருந்து புலப்படுகிறது. சகோதர ஒற்றுமையுடன் இந்த நாட்டில் ஒரு ஐக்கியத்துடன் செயற்படுவோம் என்று சிங்கள பெரும்பான்மையில் ஓர் சில அரசியல் தலைவர்கள் கூறிவருகின்ற பொழுதிலும் இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்தது. அது மட்டுமன்றி ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவோம் என்ற நிலைமையும் தோற்றுவிக்கப்படுகின்றது. மறப்போம் மன்னிப்போம் என்று கூறுகின்ற அரசாங்கம் எதையும் மறந்தபாடில்லை. யுத்த வெற்றி என்று கூறுகின்ற அரசாங்கம் யுத்தத்தின் தோல்விக்கான நினைவு தூபியையே வடகிழக்கில் நிர்மானித்திருக்கிறார்கள். சீனா, இந்தியா, அமெரிக்கா உட்பட 54 நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தங்களுடைய சுயலாபம் கருதி முற்றுகைக்குள் கொண்டு வந்தார்கள். மீண்டும் பூகோள அரசியல் காரணமாக இந்திய அரசானது ஒரு ஆயுத போராட்டத்தை இந்த நாட்டில் உருவாக்குவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியத் தலைவர் பிரபாகரனுடைய தலைமை இல்லாவிட்டாலும் வேறொரு தலைமையினால் இந்த ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கபட இருக்கிறது.
ஆகவே அரசாங்கம் அதன் பொறுப்பு வாய்ந்த நாட்டின் ஜனாதிபதி மூவின மக்களையும் நேசித்து செயற்படக் கூடியவராக தொடர்ந்தும் இருப்பதே இந்த நாடு சுமூகமான நிலையை அடையக்கூடிய வாய்ப்புக்கள் தென்படும்.

SHARE