ஐ.எஸ்.எல்.கால்பந்து : சென்னை – ஒடிசா ஆட்டம் டிரா

15
ஐ.எஸ்.எல்.கால்பந்து : சென்னை - ஒடிசா ஆட்டம் டிரா
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. இடையிலான லீக் ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னை அணியின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.
10-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 2 வெற்றி, 5 டிரா, 3 தோல்வி என்று 11 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.
SHARE