பிந்து மாதவியின் புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள்

32
எப்படி இருந்த பிந்து மாதவி... இப்படி ஆயிட்டாங்களே - ரசிகர்கள் வியப்பு

பிந்து மாதவி
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவர், தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான ஒரு நடிகையாக முத்திரை பதித்துள்ளார். அடுத்து சசிகுமார் நடிக்கும் பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து வருகிறார்.
பிந்து மாதவிஇந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் இந்த தோற்றத்துக்கு வந்துள்ளார். அவரது இந்த புது தோற்றத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள், எப்படி இருந்த பிந்து மாதவி… இப்படி ஆயிட்டாங்களே என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.
SHARE