200 புதிய சொகுசு பேருந்துகள் வாங்க ஒப்புதல் அளித்த அரசாங்கம்

39

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 200 புதிய சொகுசு பேருந்துகள் வாங்க அரசாங்கம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. நகர போக்குவரத்துச் சேவைக்கு வசதியாக போக்குவரத்து அமைச்சினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்துகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் கார்களைக் கொண்டு பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, முதற்கட்டமாக 200 குறைந்த மாடி பேருந்துகள் (Low Floor Buses) குறுகிய தூர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE