2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஊக்கப்படுத்தும் செயற்றிட்டம்.

39
அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற அமைப்பான சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள
ஊக்கப்படுத்தல் செயற்திட்டத்தினுடாக இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்களுக்கு என பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை  மற்றும் திருக்கோயில் ஆகிய நான்கு கல்வி வலயங்களில் கடந்த வருடம் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று  சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட பகுதிகளில் கொரோனாவின் தாக்கமும், பரவலும் மற்றும் சீரற்ற காலநிலை தணிந்ததன் பின்னர் நடைபெறவுள்ளதாக சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டுக்கான இளைஞர்களை வலுவூட்டல்  செயற்றிட்டதின் ஒர் அங்கமாக ஆயிரம் புலமைப்பரிசில் சான்றிதழ் கற்கை நெறிகளை அம்பாறை மாவட்டத்தில்  இலவசமாக பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு வெளியேறிய இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு வழங்க முன்வந்துள்ளதுடன், இளைஞர் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, சமாதானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ தொழிற்பாடுகள் என்பவற்றின் அபிவிருத்தி ஊடான சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான இளைஞர் படையணியை அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உருவாக்குவதும் எமது பணிகளில் உள்ளது என்றார்.
அத்துடன் வினைத்திறனான செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்கொண்டு செல்வதே நோக்கமாகக் கொண்டு செயல்படும் எமது அமைப்பினால் அனர்த்த முகாமைத்துவம், ஆங்கிலம், உளவளத்துணை, தலைமைத்துவ முகாமைத்துவம், தீயணைப்பு பாதுகாப்பு அவசர முகாமைத்துவம், கட்டுமான செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் வியாபார நிர்வாக முகாமைத்துவம் போன்ற கற்கை நெறிகள் வழங்கப்பட உள்ளது. இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் TEVC-Srilanka வினால் வழங்கப்படவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
SHARE