மாணவர் மகிமை” வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தினால் ஐந்தாம் கட்டமாக அல் மஸ்லம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

43
“மாணவர் மகிமை” வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு  திறமை காட்டிய தேவையுடைய  மாணவர்களை கௌரவிக்கும் வகையில்  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (13) இடம் பெற்றது.
வெஸ்ட் ஒப் யங் சமூகசேவைகள்  நிறுவனத்தின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு உள்நாட்டு இரைவரித் திணைக்கள உதவி ஆணையாளர்  ஜனாப்.எம்.எம். முஸம்மில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ.புஹாது, அல் மஸ்லம் வித்தியால பாடசாலை அதிபர்  ஜனாப் Z.அஹமட் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
SHARE