ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது

malcom& mahintha_CI

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி மஹிந்த, கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்துள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய பேராயர்கள் அண்மையில் பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இடம்பெற்று வரும் மத முரண்பாடுகள் குறித்து பாப்பாண்டவர் கருத்து வெளியிட்டிருந்தார்.எதிர்வரும் ஆண்டில் இலங்கை விஜயம் செய்வது குறித்தும் பாப்பாண்டவருடன், பேராயர்கள் பேசியிருந்தனர். இந்த சகல விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் கார்தினாலுக்கும் இடையிலான சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.