மோட்டார் பந்தயம்” பெப்ரவரி 27 இல் ஆரம்பம்

19

 

இருபத்தைந்தாவது தெற்கு எலியகந்த மோட்டார் பந்தயம் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

மாத்தறை பிரவுண்ஸ் ஹில் பகுதியில் இந்தப்பந்தயங்கள் மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

16 மோட்டார் சைக்கிள் பந்தயங்களும், 17 மோட்டார் கார் பந்தயங்களும் இடம்பெறவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் அனைத்தும் 27 ஆம் திகதியும் கார் பந்தயங்கள் 28 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

600 மீற்றர் ஓட்ட தூரத்தை கொண்ட இந்தப்போட்டியில் அதிவேகமாக தூரத்தை கடக்கும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படவுள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக கட்டுப்பாட்டுக்களுடன் இந்த பந்தயம் இடம்பெறவுள்ளமையால் அநேகமாக பார்வையாளர்களின்றியே இப்போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

SHARE