தொழிலதிபரை மணந்த கதாநாயகி!

20

 

பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தொழிலதிபரை மணந்துள்ளார்.

ஹைதராபாத்தில் பிறந்த தியா மிர்சா, 2001-ல் மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். தஸ் (2005), லகே ரஹோ முன்னாபாய் (2006), சஞ்சு (2018) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2014-ல் சஹில் சங்காவைத் திருமணம் செய்தார். எனினும் 2019-ல் இருவரும் பிரிந்தார்கள்.

இந்நிலையில் தொழிலதிபர் வைபவ் ரேகியை மும்பையில் திருமணம் செய்துகொண்டுள்ளார் தியா மிர்சா. திருமணப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

SHARE