வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள் 

81

 

யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமது பிள்ளைகள் உட்பட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு கிழக்கைச் சேர்ந்த தாய்மார்களை மேலும் துன்பத்திற்குள் உள்ளாக்கும் வகையில் சிறிலங்கா இராணுவம் தங்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் எவரும் சரணடையவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

சிறிலங்கா 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதி நாட்களில் இராணுவத்தினரால் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த வேண்டுகோள்களை அடுத்து முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் உட்பட இராணுவ முன்னரங்கு நிலைகளில் வைத்து சரணடைந்த மற்றும் தாங்கள் ஒப்படைத்த தமது பிள்ளைகள் உட்பட உறவுகளுக்கு நீதி கோரி சுமார் 900 நாட்களாக வடக்கு கிழக்கிலுள்ள வீதிகளில் தாய்மார்கள் போராடிவருகின்றனர்.

இதனிடையே சிறிலங்கா அரசாங்கம் அமைத்த பல்வேறு ஆணைக்குழுவிலும் முன்னிலையாகிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது பிள்ளைகள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட தினம், இடம் உட்பட பல விபரங்களையும் தெரியபடுத்தியும் உள்ளனர்.

இவ்வாறு சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் படைக் கட்டமைப்புக்களின் உறுப்பினர்கள் அல்லது நிர்வாக பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் கொழும்பிலுள்ள ஊடகமொன்றில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் தொடர்பில் விபரங்களை கேட்டிருந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிறிலங்கா அரசிடமே சரணடைந்தார்களே ஒழிய இராணுவத்திடம் சரணடையவில்லை என்று பதிலளித்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தமிழ்மிரர் பத்திரிகையின் ஊடகவியலாளர் நிரோஷ் குமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

அதேவேளை சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தொடர்பிலான விடையங்களை அணுகும் அதிகாரம்வாய்ந்த நிறுவனமான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை தொடர்புகொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து, ஊடகவியலாளருக்கு ஆலோசணை வழங்கியிருக்கின்றார்.

ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட படைத் தளபதிகள் பலர் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கும் நிலையிலேயே சிறிலங்கா இராணுவம் தற்போது அதற்கு முற்றிலும் மாறான கருத்தை தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தின் காலால் படையின் இயந்திர பிரிவில் கடமையாற்றிய தற்போதைய ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்களுக்க முற்றிலும் மாறுப்பட்ட தகவல்களை யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதற்கமைய 11 ஆயிரத்து 800 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச 2013 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறிலங்கா இராணுவம் தங்களிடம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை என்று கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமனான விடையம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிய் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞர்னம் சிறிதரன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தவரான மஹிந்தவாதி நாடாளுடமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, 2018 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் உட்பட அப்பாவி பொது மக்களும் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட OMP என்ற காணாமல்போனோர் அலுவலகமும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த ஏராமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இராணுவ தடுப்பி இருந்த நிலையில் காணாமல் ஆக்கப்படடவர்களை கண்டுபிடிப்பது தமது அலுவலகத்தின் பிரதான கடமைகளில் ஒன்றென OMP தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ் அறிவித்திருந்ததுடன், சரணடைந்த மற்றும் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

யுத்தத்தின் பின்னர் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் அவருக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக பதவிவகித்த ஜெனரல் கிருஷாந்த சில்வா தலைமையில் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த ஐந்து பேர் அடங்கிய இராணுவ விசாரணைக் குழுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இராணுவத்தினரின் தடுப்பில் இருந்ததை உறுதிப்படுத்தியிருந்தது.

அது மாத்திரமன்றி சிறிலங்காவின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக் காலப்பகுதியான 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்படட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓய்வுபெறற நீதிபதி பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களும், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடர்பிலான உண்மைகளும் அவர்களது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி ( செயற்பாடு தெரியாது)
அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
இசைபிரியா ( ஊடக பிரிவு)
ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
குயிலன் ( இராணுவ புலனாய்வு)
குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
மலரவன் (நிர்வாக சேவை )
மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
முகிலன் (இராணுவ புலனாய்வு)
முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
balakumaran-custody இறுதி
நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
நேயன் (புலனாய்வு)
நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்
நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
புலித்தேவன் (சமாதான செயலகம்)
புலிமைந்தன் (யோகியின் சாரதி)
புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
சின்னவன் (புலனாய்வு)
சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
வினிதா (நடேசனின் மனைவி )
வீமன் (கட்டளை தளபதி)
விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
யோகன் / சேமணன் (அரசியல் துறை)
யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார்.

புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.

இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.

தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்தார்.

(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.
(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.
(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.

1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.
1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.

1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.

1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் ஜே.ஆர். ஐயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.

1979 ஆடி 20ம் நாள் Nஐ.ஆர்.nஐயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.

இதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (Nஐ.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.

இதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார்.

இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.

இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.

சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.
1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.
1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ . ஆர் . ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடி.

1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.
1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.

1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட் – டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.

தமிழீழப் போர் 1 : (ஆவணி 1984 – ஆடி 1987)

ஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.

தமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்!.

**

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.

02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை
04. கரும்புலிகள்
05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை
07. வேவுப்பிரிவு
08. ஒளிப்பதிவுப் பிரிவு
09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு
10. கணணிப் பிரிவு
11. மாணவர் அமைப்பு
12. தமிழீழ வைப்பகம்
13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
14. அனைத்துலகச் செயலகம்
15. சுங்கவரித் துறை
16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி
18. அரசறிவியற் கல்லூரி
19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு
20. வன வளத்துறை
21. தமிழீழ நிதித்துறை
22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்
24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை
25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை
31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்
32. ஈழநாதம் செய்தி இதழ்
33. வெளிச்சம் செய்தி இதழ்
34. ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை
35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
36. நிதர்சனம்
37. புலிகளின் குரல் வானொலி
38. மாவீரர் பணிமனை
39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம்
42. சேரன் சுவையகம்
43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
44. பாண்டியன் வாணிபம்
45. பாண்டியன் சுவையூற்று
46. சோழன் தயாரிப்புகள்
47. வழங்கற் பிரிவு
48. சூழல் நல்லாட்சி ஆணையகம்
49. நிர்வாக சேவை
50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு
52. திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு
53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை
55. தமிழீழ விளையாட்டுத்துறை
56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

SHARE