கிரிக்கெட் தொடர் – நேர அட்டவணை வௌியானது!

13

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரையிறுதி போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

SSC மற்றும் பதுரலிய அணிகள் பங்குபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டி, கொழும்பு NCC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதி போட்டி கொழும்பு P.சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் கோல்ட்ஸ் மற்றும் லங்கன் கிரிக்கெட் சமாஜய அணிகள் மோதவுள்ளன.

இதற்கமைய, கொழும்பு SSC மைதானத்தில் இறுதிப்போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

SHARE