சூரரை போற்று நடிகர் சூர்யாவின் படங்களில் மிக முக்கியமானதாகிவிட்டது. அவரின் தோல்விகளை விமர்சித்தவர்கள் மத்தியில் இப்படத்தின் வெற்றி மூக்கின் மேல் விரல் வைத்துவிட்டது எனலாம்.
இயக்குனர் சுதா கே பிரசாத்தின் நேர்த்தியான கதையும், சூர்யா மற்றும் அபர்ணா முரளியின் நடிப்பும், ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்களும் படத்தின் பக்க பலம் எனலாம்.
படத்தை ஓடிடியில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் படம் நல்ல விலைக்கு போனது. அமேசான் தளத்தில் பிராந்திய மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சிறப்பும் சூரரை போற்று படத்திற்கு உண்டு.
அண்மையில் படம் 100 ம் நாளை எட்டி ரசிகர்கள் ஹேஷ் டேக் மூலம் கொண்டாடினர்.
இதனையடுத்து இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் 5 வீடியோக்களாக வெளியிடப்பட்டன. அவையும் Youtube ல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.