கரீனா கபூருக்கு குழந்தை பிறந்தது

12

 

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே நடிகை கரீனா கபூர் கடந்தாண்டு மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், நடிகை கரீனா கபூரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தை பெற்றெடுத்த கரீனா கபூர் – சயீப் அலிகான் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

SHARE