தடுப்பூசிகளை மனிதர்களுக்குச் செலுத்தி சோதிக்க சீனா அனுமதி!

10

 

சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள 16 கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை மனிதர்களுக்குச் செலுத்தி சோதிக்க அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இந்த தடுப்பூசிகளை தன்னார்வலர்களுக்குச் செலுத்தி சோதிப்பதற்கு சீன மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இவற்றில் ஆறு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனை நிலையில் உள்ளன என அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, சைனோஃபார்ம், சைனோவேக் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் இரு கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE