இரு பாடசாலைகளில் உருமாறிய கொவிட்-19 தொற்று: மாணவர்களுக்கு எச்சரிக்கை!

12

 

பிரேசர் சுகாதாரப் பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு பாடசாலைகளில் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரேசர் ஹெல்த் படி, சர்ரேயில் உள்ள குவாண்ட்லன் பார்க் செகண்டரி மற்றும் டெல்டாவில் உள்ள ஹெல்லிங்ஸ் பார்க் எலிமெண்டரி ஆகியவற்றில் வெளிப்பாடு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பாதிப்புக்குள்ளானவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க மாறுபட்ட தொற்று நோயாளர்களை நாங்கள் பகிரங்கமாக அடையாளம் காணவில்லை.

அந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே நெருக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்புகள் சோதிக்கப்பட வேண்டும் மற்றும் தொடர்பு கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகள் திறந்திருக்கும்’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE