சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்!

13

 

டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வீழ்த்தி ஜோகோவிச் 18ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றார்.

அத்துடன் இது ஜோகோவிச்சின் ஒன்பதாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.

இந்த வெற்றியின் மூலம் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஜோகோவிச், 311ஆவது வாரமாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். பெடரர் 310 வாரங்கள் டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

SHARE