ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

30

 

புனேவில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் மார்ச் 23, 26 மற்றும் 28 ஆகிய திகதிகளில் புனேவிலுள்ள மைதானத்தில் நடைபெறுகின்றன.

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனேயில் நடத்தப்படும் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த மகராஷ்டிரா மாநில அரசு, பிசி.சி.ஐ.-க்கு அனுமதி வழங்கியுள்ளது

SHARE