131 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி

21

 

ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி ஆட்ட நேர முடிவில் சிம்பாவே அணி 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று இரண்டு ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

அவ்வணி சார்பாக அணித் தலைவர் சோன் வில்லியம்ஸ் அட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அமீர் ஹம்ஸா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக அப்சர் ஸாசாய் 37 ஓட்டங்களையும் இப்ராஹிம் சத்ரான் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் சிம்பாவே அணி சார்பாக முசரபானி 4 விக்கெட்களையும் விக்டர் நியாச்சி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

SHARE