உலக டென்னிஸ் தொடர்: ஆண்டி முர்ரே வெற்றி

24

 

ஏபிஎன் அம்ரோ உலக டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், பிரித்தானியாவின் ஆண்டி முர்ரே வெற்றிபெற்றுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரித்தானியாவின் ஆண்டி முர்ரே, வைல்ட் கார்ட் போட்டியாளரான நெதர்லாந்தின் ரொபின் ஹேஸை எதிர்கொண்டார்.

இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், ஆண்டி முர்ரே, 2-6, 7-6 (2), 6-3 என்ற செட் கணக்கில் ஹேஸை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான 33 வயதான ஆண்டி முர்ரே, கடந்த ஒகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெற்ற முதல் வெற்றியாகும்.

முர்ரே கடுமையான இடுப்பு காயத்திலிருந்து திரும்பிய பின்னர் தற்போது தரவரிசையில் 123ஆவது இடத்தில் உள்ளார்.

SHARE